God is love

God is love

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

சிறப்புடைய இடுகை

மனம் போல் வாழ்வு

 பிரபஞ்சத்தை ஆளும்  ஒழுக்கம் . ஒருவன் தன் நிலைமையைப்பற்றிச் சிணுங்குதலையும், நிந்தித்தலையும் விட்டுத் தனது வாழ்க்கையை விதிக்கும் கண்ணுக்கு த...

இந்த வலைப்பதிவில் தேடு

A lifelong learner

இந்த வலைப்பதிவில் தேடு

Chidambarambabuji

Chidambarambabuji
A lifelong learner

எனது வலைப்பதிவு பட்டியல்

Translate

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

செவ்வாய், 10 டிசம்பர், 2024

அச்சம் என்பது மடமையடா.

 மனிதனின் சுபாவமே தனக்கு அறிமுகம் இல்லாத மனிதர்கள்,இடம்,பொருட்கள்,மொழி இவற்றை பார்த்து பயப்படுவதுதான்.இந்த மனித  இயற்கை சுபாவத்தை பயன்படுத்தி ,பிறரை பயமூட்டி அதில் குளிர் காய்ப்பவர்களும் உண்டு.

ஒரு இடத்தைப்பற்றி,பொருட்களை கையாளும் விதத்தை,பிற மொழியை மனிதர்களை பற்றி நாம் நூற்கள் மூலமாக அறிந்து கொண்டால் பயம் என்ற எதிர்மறை உணர்விலிருந்து விடுபடலாம்.பொது அறிவையும் வளர்த்து கொள்வது அவசியம்.

எல்லோரும்  எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை.அது தேவையும் இல்லை.ஆனால் எந்த காலகட்டத்திற்கு எது தேவையே அதை புத்தங்கள் மூலமாக அது சம்பந்தமாக கற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வதில் தவறில்லை.தேவையில்லாத பய உணர்வு மேலும் நம்மை சிக்கலில் ஆழ்த்தும்.பிறர் நம்மை பய உணர்ச்சிக்கு ஆளாக்கும் போது விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

ஒருவரின் தோல்வி, மற்றவருக்கு பாடமாக அமையலாமே தவிர பயமாக மாறக்கூடாது.இது ஒருவருடைய தன்னுணர்வு சம்பந்தப்பட்டது.தன்னுணர்வை அறிவு பூர்வமாக வளர்த்து கொண்டவர்கள், எத்தகைய சூழ்நிலைகளையும் கடந்து செல்ல முடியும்.

அச்சம் என்பது மடமையடா.

திங்கள், 9 டிசம்பர், 2024

தினசரி

 தினசரி எல்லா நாளிதழ்களையும் நுனிப்புல் மெய்வதுண்டு.ஒன்றிரண்டு எனக்கு தேவையான கருத்துக்களை பார்ப்பதும் உண்டு.எல்லா தலையங்கமும் ஒரே கருத்துதான்.மொழியின் நடை வித்தியாசப்படுகிறது. அவ்வளவே.

இந்திய தத்துவ கோட்பாடான அத்வைதம், எதைத் தெரிந்தால் எல்லாம் தெரிந்தது போலாகுமோ,அது போல இது இப்படிதான் என்று தெரிந்த பிறகு மேலே சொல்ல ஒன்றுமில்லை.நாட்களும், தட்ப வெட்ப நிலைகளும் மாறுகிறது, மனித பொதுமனங்களில் மாற்றமில்லை.தினசரி நிகழ்வுகளை தனக்கு சொந்தமாக்கி கொள்ள நினைக்கும் மனது தன்னை சுற்றி இருப்பவர்களை நினைப்பது இல்லை.அரசாட்சிக்கு இந்த மனப்பான்மை மிக அவசியம்.

இதுவே தினசரி .

The art of copy writing

 Copy writing is an art of digital writing in blogger, email,websites and other social media. Today I attended an online course on Copy writing and earned a certificate from Skill India.

    The course details every aspect of copy writing such as how to attract readers and customers when you publish a content. The main idea is to get the subscribers to like your products. It is not only commercial point of view but also literary point.

The course will be useful for everyone who wish to improve their digital writing skills.

Try your hand in "Skill India" website.

T.Chidambaram.



புதன், 4 டிசம்பர், 2024

வரட்டுமா மாப்பிளே!

 மச்சான் என்ற சொல் தற்போது "மச்சி" " மாப்பிளே" " மச்சீஸ்"போன்று தமிழகத்தில் பல இடங்களில் பல உறவு முறைகளால் வழங்கப்பட்டு வருகிறது."மச்சினன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம்" என்ற சொலவாடை உண்டு.அண்மையில் வந்த "மெய்யழகன்"திரைப்படம் இந்த உறவை சரியாக. முறையில் திரையில் வெளிக்கொணர முயற்சி செய்திருந்தார் அந்த இயக்குநர்.

 உண்மையில் இந்த" மச்சினன்" என்ற உறவு தமிழக குடும்ப கலாச்சாரத்தில் முக்கியமான ஒரு உறவாகவே இருந்து வருகிறது.நண்பர்கள் ,வெவ்வேறு ஜாதியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் "மாப்பிளை" "மச்சான்" என்று அழைத்து தங்கள் நட்பை பலபடுத்தி கொள்வதை அன்றாடம்  பார்க்கிறோம்.சுப்பிரமணியபுரம் திரைப்படமும் இந்த உறவை  வெளிக்கொண்டு வந்தது.


இந்த உறவு பெரும்பாலும் கறிவேப்பிலை உறவாகத்தான் மற்றவர்களால்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.உதாரணத்திற்கு,ஒரு திருமண வீடு,சடங்குவீடுஅல்லது ஒரு துக்க வீடு ,ஒரு திருவிழா போன்ற நிகழ்வுகளில்  இந்த மாப்பிளை உறவு யாராவது ஒருவர் வடிவில் வந்து முன் நிற்கும் குலசாமி.

வெளியூரிலிருந்து வரும் தன் சொந்த உறவுகளை, அல்லது நண்பர்களை, இரயில்வே நிலையத்திலிருந்து வரவேற்று அவன் ஊர்திரும்பி செல்லும் வரை தினசரி பொழுதை கழித்து அவர்களுக்கு  அன்றாடம் பணிவிடை செய்து வரும் ஒரு உறவு.இதனால் அவனுக்கு என்ன பயன் என்று பார்த்தால் ஒன்றுமில்லை.அவனது வாழ்க்கை ஆதாரம் பெரும்பாலும் உறவிர்களின் வருகை மற்றும் நண்பர்களின் வருகையை பொருத்தே அமைகிறது.

சில மாப்பிளைகள் சொந்த ஊரிலேயே ,வெளியூர் பயணிக்காமல் ,யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து மடிந்து போகும் ஒரு ஜீவன்.ஊரிலிருந்து வரும் உறவுகளுக்கு திருமணம் நடத்தி வைப்பான்,ஆனால் தன்னுடைய திருமணம் பற்றி யோசிக்கமாட்டான்.பிறருக்கும் அவனைப்பற்றிய அக்கரை இருக்காது. 

இதனிடையில் மாப்பிளைக்கு குடிப்பழக்கம் இருந்தால் அவனிடம் நன்றாகவே வேலை வாங்கலாம்.

தன் குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காவும் வாழும் இந்த மாப்பிளை என்ற மச்சான் ஜாதியை தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் சந்திக்கலாம்.

மாப்பிளே வரட்டுமா! 


வியாழன், 26 செப்டம்பர், 2024

பண்பாட்டு தேக்கம்

 பண்பாட்டு தேக்கமும் அதிர்ச்சியும்.


பண்பாட்டுத் தேக்கம்,

பண்பாட்டு மாற்றம் வற்புறுத்துதல் மூலமும் நடைபெறும். இது

பெரும்பாலும் ஒரு பகுதியை வேற்று இனத்தவர் அல்லது நாட்டவர்கைப்பற்றி வந்தேறியவர்களின் பண்பாட்டைப்பின்பற்றுமாறு

செய்வதால் நிகழும். இதற்கு எடுத்துக்காட்டாக நம் நாட்டில் ஏற்பட்ட ஆங்கிலேய ஆட்சியைக் கூடச் சொல்லலாம். இன்றைய நவீன உ லகில்

மக்கள் வேற்று நாட்டிற்குக் குடியேறும்போது அந்நாட்டின் சிலசட்டதிட்டங்களை ஏற்று நடக்கும்போது பண்பாட்டு மாற்றம் நிகழும்.

இவ்வாறான நிலையில் ஒரு பண்பாடு ஏதேனும் ஒரு காரணத்தால்மாற்றத்திற்கு இலக்காகும்போது அம்மக்கள் சில வழிகளில் மாறும்சூழலுக்கேற்பத் தகவமைந்து கொள்வர். ஆனால்சிலவழிகளில்

தகவமையாமல் நிற்பர். அவ்வாறு தகவமையாமல் போனால் தகவமைந்த புதிய கூறுகளுக்கும் அவர்களின் பழைய மரபுகளுக்கும்

(தகவமையாத கூறுகள்) இடையே தேக்கம் ஏற்படும். இதையேபண்பாட்டுத் தேக்கம் (cultural lag) என்பர் மானிடவியலார்.

 எடுத்துக்காட்டாக அமெரிக்கப் பகுதியில் குடியேறும் தமிழ் மக்கள் அங்குள்ளசூழலுக்கேற்பப் பொருள்சார் கூறுகளை மாற்றிக்கொள்வர். ஆனால்அமெரிக்க மக்களின் பொருள்சாராக் கூறுகளை அவ்வளவு எளிதில்

ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் இவர்களின் குடியேற்றப்பண்பாட்டில் ஒரு தேக்கம் நிலவும். பொருள்சார் கூறுகளில் ஏற்படும்மாற்றம் பொருள்சாராக் கூறுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல்போனால் தேக்கம் நிகழ்வதைப் போல பண்பாட்டின் வேறு பிரிவு

களிலும் இவ்வாறு தேக்கம் நிகழ்வதுண்டு.


இதுவரை காணாத  புதிய பண்பாட்டுச் சூழலுடன் 

வினைபுரிய வேண்டிய நெருக்கடி எற்படும். இந்த வினைபுரிதலில் ஏற்படும் அதிர்ச்சியானது 

உணர்வு நிலையை மட்டுமே பாதிக்கும் என்று கூறமுடியாது..

மக்களின்  அறிதிறன்( Cognition) பாங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்த கூடிதாக இருக்கும். மக்களின் உணர்வையும் அறிதிறனையும் பாதிக்கக்கூடியதாக இவ்வதிர்ச்சி பருநிலையில் இரண்டு தளங்களோடு 

 (உணர்வு, அறிதிறன்) காணப்பட்டாலும் நடைமுறையில்

இதன் அழுத்தமாவது மனவெழுச்சி, நிலைபிறழ்வு, வாழ்வுப் பாங்கில்

இயல்பு மீறிய நோக்குநிலை, இயல்புமீறிய பகுத்தறிவு சாராமை, இயல்பாக எதிர்பார்க்கும் நடப்பியல் பிறழ்வு போன்ற எண்ணற்ற 

வடிவங்களில் வெளிப்படுவதாக இருக்கும்.


பண்பாட்டு மானுடவியல் 

பக்தவத்சல பாரதி.

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

Social change

 சமூக மாற்றம் Social Change 


கலாச்சார மற்றும் சமூக நிறுவனங்களை மாற்றும் மனித தொடர்புகள் மற்றும் உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் சமூக மாற்றத்தை சமூகவியலாளர்கள் வரையறுக்கின்றனர். 

இந்த மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்கின்றன மற்றும் பெரும்பாலும் சமூகத்தில் ஆழமான மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்துகின்றன


திருமணம் என்ற பந்தம் தற்போது மேலைநாகரீக கோட்பாடுகளின் படி ஒரு சமூக நிறுவனமாக மாறிஇருக்கிறது.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணம் என்கிற புனிதச்சடங்கு தற்போது ஒரு சமூக நிகழ்வாக மட்டும் மாறி இருப்பதை காண முடிகிறது.காரணம் பலவாக இருந்தாலும் ,முதல் காரணமாக பெண்களின் சுய மரியாதை வளர்ச்சியும் அவர்களின் பொருளாதார தற்சார்ப்பு நிலையும் கருத்தில் கொள்ள வேண்டியது இருக்கிறது.சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வந்தபிறகு பெண்களுக்கான தொழிற்கல்வி வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியை கண்டது மட்டுமல்லாது பெண்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்க தொடங்கியது.அவர்களது உடல் மற்றும் மனத்தகுதிக்கு ஏற்ப தகவல் தொழில் நுட்ட துறையில் வேலைவாய்ப்பு அதிகமாக உருவாகியது.இதுசமூக அமைப்பில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது.பெண்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்கும் திறன் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னை வெளிப்படுத்தி கொள்ளுதல் போன்ற செயல்களால் பெண்களின் சுயமதிப்பும் அவர்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதன் விளைவாக மற்ற சமூக நிறவனங்களான குடும்பம்,பெற்றோர்கள்,திருமணம்,குழந்தை வளர்ப்பு,கல்வி,மருத்துவம்,சுகாதாரம் எல்லா துறைகளிலும் அவர்களுடைய சமூக வெளிப்பாடு அதிகரித்ததன் விளைவு, சமூதாய அமைப்பு சிறிது நகர்ந்து நடுநிலைச்சமுதாயமாக மாற ஆரம்பித்திருக்கிறது.பெண்கள் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அதிகரித்து இருக்கிறது.மணவாழ்க்கை ஒரு புனிதமான சமூக அமைப்பிலிருந்து மாறி ஓரு சமூக ஒப்பந்தமாக மாறியாகிவிட்டது.முதல் தலைமுறைக்கும் தற்போதைய தலைமுறைக்கும் எப்போதும் இல்லாத அளவுக்கு தலைமுறை இடைவெளி அதிகமாக இருக்கிறது.இதன் விளைவாக பெற்றோர்களின் முடிவெடுக்கும் தன்மை குறைந்திருக்கிறது.அவர்களின் பொருளாதாரம் சீராக இருந்தால்

முதியவர்களின் பாதுகாப்பு உறுதி பெருகிறது.இல்லையெனில்ஒரு பாதுகாப்பு இல்லாத தன்மை உருவாகி அவர்கள் சமூகத்தில்,பிற சமூக நல அமைப்புகள்,முதியோர் இல்லம், ஆதரவற்றவர் இல்லம் போன்ற அமைப்புகளுக்கு இட்டுச்செல்லப்படுகின்றனர்..

இதில் யாரையும் குறை கூற முடியாது.காரணம் சமூக அமைப்பில் மாற்றம் நிகழும் போது அதை ஏற்றும் கொள்ளும் மனப்பான்மை இரண்டு தலைமுறைகளுக்கும் வேண்டும்.



புதன், 13 மார்ச், 2024