மனிதனின் சுபாவமே தனக்கு அறிமுகம் இல்லாத மனிதர்கள்,இடம்,பொருட்கள்,மொழி இவற்றை பார்த்து பயப்படுவதுதான்.இந்த மனித இயற்கை சுபாவத்தை பயன்படுத்தி ,பிறரை பயமூட்டி அதில் குளிர் காய்ப்பவர்களும் உண்டு.
ஒரு இடத்தைப்பற்றி,பொருட்களை கையாளும் விதத்தை,பிற மொழியை மனிதர்களை பற்றி நாம் நூற்கள் மூலமாக அறிந்து கொண்டால் பயம் என்ற எதிர்மறை உணர்விலிருந்து விடுபடலாம்.பொது அறிவையும் வளர்த்து கொள்வது அவசியம்.
எல்லோரும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை.அது தேவையும் இல்லை.ஆனால் எந்த காலகட்டத்திற்கு எது தேவையே அதை புத்தங்கள் மூலமாக அது சம்பந்தமாக கற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வதில் தவறில்லை.தேவையில்லாத பய உணர்வு மேலும் நம்மை சிக்கலில் ஆழ்த்தும்.பிறர் நம்மை பய உணர்ச்சிக்கு ஆளாக்கும் போது விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
ஒருவரின் தோல்வி, மற்றவருக்கு பாடமாக அமையலாமே தவிர பயமாக மாறக்கூடாது.இது ஒருவருடைய தன்னுணர்வு சம்பந்தப்பட்டது.தன்னுணர்வை அறிவு பூர்வமாக வளர்த்து கொண்டவர்கள், எத்தகைய சூழ்நிலைகளையும் கடந்து செல்ல முடியும்.
அச்சம் என்பது மடமையடா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக