மச்சான் என்ற சொல் தற்போது "மச்சி" " மாப்பிளே" " மச்சீஸ்"போன்று தமிழகத்தில் பல இடங்களில் பல உறவு முறைகளால் வழங்கப்பட்டு வருகிறது."மச்சினன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம்" என்ற சொலவாடை உண்டு.அண்மையில் வந்த "மெய்யழகன்"திரைப்படம் இந்த உறவை சரியாக. முறையில் திரையில் வெளிக்கொணர முயற்சி செய்திருந்தார் அந்த இயக்குநர்.
உண்மையில் இந்த" மச்சினன்" என்ற உறவு தமிழக குடும்ப கலாச்சாரத்தில் முக்கியமான ஒரு உறவாகவே இருந்து வருகிறது.நண்பர்கள் ,வெவ்வேறு ஜாதியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் "மாப்பிளை" "மச்சான்" என்று அழைத்து தங்கள் நட்பை பலபடுத்தி கொள்வதை அன்றாடம் பார்க்கிறோம்.சுப்பிரமணியபுரம் திரைப்படமும் இந்த உறவை வெளிக்கொண்டு வந்தது.
இந்த உறவு பெரும்பாலும் கறிவேப்பிலை உறவாகத்தான் மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.உதாரணத்திற்கு,ஒரு திருமண வீடு,சடங்குவீடுஅல்லது ஒரு துக்க வீடு ,ஒரு திருவிழா போன்ற நிகழ்வுகளில் இந்த மாப்பிளை உறவு யாராவது ஒருவர் வடிவில் வந்து முன் நிற்கும் குலசாமி.
வெளியூரிலிருந்து வரும் தன் சொந்த உறவுகளை, அல்லது நண்பர்களை, இரயில்வே நிலையத்திலிருந்து வரவேற்று அவன் ஊர்திரும்பி செல்லும் வரை தினசரி பொழுதை கழித்து அவர்களுக்கு அன்றாடம் பணிவிடை செய்து வரும் ஒரு உறவு.இதனால் அவனுக்கு என்ன பயன் என்று பார்த்தால் ஒன்றுமில்லை.அவனது வாழ்க்கை ஆதாரம் பெரும்பாலும் உறவிர்களின் வருகை மற்றும் நண்பர்களின் வருகையை பொருத்தே அமைகிறது.
சில மாப்பிளைகள் சொந்த ஊரிலேயே ,வெளியூர் பயணிக்காமல் ,யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து மடிந்து போகும் ஒரு ஜீவன்.ஊரிலிருந்து வரும் உறவுகளுக்கு திருமணம் நடத்தி வைப்பான்,ஆனால் தன்னுடைய திருமணம் பற்றி யோசிக்கமாட்டான்.பிறருக்கும் அவனைப்பற்றிய அக்கரை இருக்காது.
இதனிடையில் மாப்பிளைக்கு குடிப்பழக்கம் இருந்தால் அவனிடம் நன்றாகவே வேலை வாங்கலாம்.
தன் குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காவும் வாழும் இந்த மாப்பிளை என்ற மச்சான் ஜாதியை தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் சந்திக்கலாம்.
மாப்பிளே வரட்டுமா!