பண்பாட்டு தேக்கமும் அதிர்ச்சியும்.
பண்பாட்டுத் தேக்கம்,
பண்பாட்டு மாற்றம் வற்புறுத்துதல் மூலமும் நடைபெறும். இது
பெரும்பாலும் ஒரு பகுதியை வேற்று இனத்தவர் அல்லது நாட்டவர்கைப்பற்றி வந்தேறியவர்களின் பண்பாட்டைப்பின்பற்றுமாறு
செய்வதால் நிகழும். இதற்கு எடுத்துக்காட்டாக நம் நாட்டில் ஏற்பட்ட ஆங்கிலேய ஆட்சியைக் கூடச் சொல்லலாம். இன்றைய நவீன உ லகில்
மக்கள் வேற்று நாட்டிற்குக் குடியேறும்போது அந்நாட்டின் சிலசட்டதிட்டங்களை ஏற்று நடக்கும்போது பண்பாட்டு மாற்றம் நிகழும்.
இவ்வாறான நிலையில் ஒரு பண்பாடு ஏதேனும் ஒரு காரணத்தால்மாற்றத்திற்கு இலக்காகும்போது அம்மக்கள் சில வழிகளில் மாறும்சூழலுக்கேற்பத் தகவமைந்து கொள்வர். ஆனால்சிலவழிகளில்
தகவமையாமல் நிற்பர். அவ்வாறு தகவமையாமல் போனால் தகவமைந்த புதிய கூறுகளுக்கும் அவர்களின் பழைய மரபுகளுக்கும்
(தகவமையாத கூறுகள்) இடையே தேக்கம் ஏற்படும். இதையேபண்பாட்டுத் தேக்கம் (cultural lag) என்பர் மானிடவியலார்.
எடுத்துக்காட்டாக அமெரிக்கப் பகுதியில் குடியேறும் தமிழ் மக்கள் அங்குள்ளசூழலுக்கேற்பப் பொருள்சார் கூறுகளை மாற்றிக்கொள்வர். ஆனால்அமெரிக்க மக்களின் பொருள்சாராக் கூறுகளை அவ்வளவு எளிதில்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் இவர்களின் குடியேற்றப்பண்பாட்டில் ஒரு தேக்கம் நிலவும். பொருள்சார் கூறுகளில் ஏற்படும்மாற்றம் பொருள்சாராக் கூறுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல்போனால் தேக்கம் நிகழ்வதைப் போல பண்பாட்டின் வேறு பிரிவு
களிலும் இவ்வாறு தேக்கம் நிகழ்வதுண்டு.
இதுவரை காணாத புதிய பண்பாட்டுச் சூழலுடன்
வினைபுரிய வேண்டிய நெருக்கடி எற்படும். இந்த வினைபுரிதலில் ஏற்படும் அதிர்ச்சியானது
உணர்வு நிலையை மட்டுமே பாதிக்கும் என்று கூறமுடியாது..
மக்களின் அறிதிறன்( Cognition) பாங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்த கூடிதாக இருக்கும். மக்களின் உணர்வையும் அறிதிறனையும் பாதிக்கக்கூடியதாக இவ்வதிர்ச்சி பருநிலையில் இரண்டு தளங்களோடு
(உணர்வு, அறிதிறன்) காணப்பட்டாலும் நடைமுறையில்
இதன் அழுத்தமாவது மனவெழுச்சி, நிலைபிறழ்வு, வாழ்வுப் பாங்கில்
இயல்பு மீறிய நோக்குநிலை, இயல்புமீறிய பகுத்தறிவு சாராமை, இயல்பாக எதிர்பார்க்கும் நடப்பியல் பிறழ்வு போன்ற எண்ணற்ற
வடிவங்களில் வெளிப்படுவதாக இருக்கும்.
பண்பாட்டு மானுடவியல்
பக்தவத்சல பாரதி.
