சமூக மாற்றம் Social Change
கலாச்சார மற்றும் சமூக நிறுவனங்களை மாற்றும் மனித தொடர்புகள் மற்றும் உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் சமூக மாற்றத்தை சமூகவியலாளர்கள் வரையறுக்கின்றனர்.
இந்த மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்கின்றன மற்றும் பெரும்பாலும் சமூகத்தில் ஆழமான மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்துகின்றன
திருமணம் என்ற பந்தம் தற்போது மேலைநாகரீக கோட்பாடுகளின் படி ஒரு சமூக நிறுவனமாக மாறிஇருக்கிறது.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணம் என்கிற புனிதச்சடங்கு தற்போது ஒரு சமூக நிகழ்வாக மட்டும் மாறி இருப்பதை காண முடிகிறது.காரணம் பலவாக இருந்தாலும் ,முதல் காரணமாக பெண்களின் சுய மரியாதை வளர்ச்சியும் அவர்களின் பொருளாதார தற்சார்ப்பு நிலையும் கருத்தில் கொள்ள வேண்டியது இருக்கிறது.சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வந்தபிறகு பெண்களுக்கான தொழிற்கல்வி வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியை கண்டது மட்டுமல்லாது பெண்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்க தொடங்கியது.அவர்களது உடல் மற்றும் மனத்தகுதிக்கு ஏற்ப தகவல் தொழில் நுட்ட துறையில் வேலைவாய்ப்பு அதிகமாக உருவாகியது.இதுசமூக அமைப்பில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது.பெண்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்கும் திறன் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னை வெளிப்படுத்தி கொள்ளுதல் போன்ற செயல்களால் பெண்களின் சுயமதிப்பும் அவர்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதன் விளைவாக மற்ற சமூக நிறவனங்களான குடும்பம்,பெற்றோர்கள்,திருமணம்,குழந்தை வளர்ப்பு,கல்வி,மருத்துவம்,சுகாதாரம் எல்லா துறைகளிலும் அவர்களுடைய சமூக வெளிப்பாடு அதிகரித்ததன் விளைவு, சமூதாய அமைப்பு சிறிது நகர்ந்து நடுநிலைச்சமுதாயமாக மாற ஆரம்பித்திருக்கிறது.பெண்கள் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அதிகரித்து இருக்கிறது.மணவாழ்க்கை ஒரு புனிதமான சமூக அமைப்பிலிருந்து மாறி ஓரு சமூக ஒப்பந்தமாக மாறியாகிவிட்டது.முதல் தலைமுறைக்கும் தற்போதைய தலைமுறைக்கும் எப்போதும் இல்லாத அளவுக்கு தலைமுறை இடைவெளி அதிகமாக இருக்கிறது.இதன் விளைவாக பெற்றோர்களின் முடிவெடுக்கும் தன்மை குறைந்திருக்கிறது.அவர்களின் பொருளாதாரம் சீராக இருந்தால்
முதியவர்களின் பாதுகாப்பு உறுதி பெருகிறது.இல்லையெனில்ஒரு பாதுகாப்பு இல்லாத தன்மை உருவாகி அவர்கள் சமூகத்தில்,பிற சமூக நல அமைப்புகள்,முதியோர் இல்லம், ஆதரவற்றவர் இல்லம் போன்ற அமைப்புகளுக்கு இட்டுச்செல்லப்படுகின்றனர்..
இதில் யாரையும் குறை கூற முடியாது.காரணம் சமூக அமைப்பில் மாற்றம் நிகழும் போது அதை ஏற்றும் கொள்ளும் மனப்பான்மை இரண்டு தலைமுறைகளுக்கும் வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக