God is love

God is love

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

சிறப்புடைய இடுகை

மனம் போல் வாழ்வு

 பிரபஞ்சத்தை ஆளும்  ஒழுக்கம் . ஒருவன் தன் நிலைமையைப்பற்றிச் சிணுங்குதலையும், நிந்தித்தலையும் விட்டுத் தனது வாழ்க்கையை விதிக்கும் கண்ணுக்கு த...

இந்த வலைப்பதிவில் தேடு

A lifelong learner

இந்த வலைப்பதிவில் தேடு

Chidambarambabuji

Chidambarambabuji
A lifelong learner

எனது வலைப்பதிவு பட்டியல்

Translate

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

புதன், 13 மார்ச், 2024

Spoken English Training in Thovalai

View My Profile

T.M.Chidambarathaanupillai M.L.C.in Travancore Sri Chitra State Council

 தோவாளை, வக்கீல்.-தென் திருவிதாங்கூர் சமஸ்தான மேனாள்   ஸ்ரீ சித்ரா  சட்ட மேலவை உறுப்பினர் (M.L.C)முத்தையாபிள்ளை

சிதம்பரதாணுபிள்ளை

(டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை)

ஒரு வரலாற்று குறிப்பு.


தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோவாளை தாலுகா ,நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியாக  இருந்து வந்தது.தோவாளை கிராமத்தை பூர்வீகமாக  கொண்ட  வக்கீல் மற்றும் மேனாள் தென்திருவிதாங்கூர் சமஸ்தான ஸ்ரீ சித்ரா சட்டமேலவை உறுப்பினர் (M.L.C)

காலஞ்சென்ற திரு.டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை ஆவார்.அன்னாரது தந்தையார்.முத்தையாபிள்ளை ,தாயார் சிதம்பரவடிவு  ஆகும்.

இவருடைய பொது  வாழ்க்கையின் போது மொழிவாரியாக நமது பாரத தேசம்பிரிக்கப்படவில்லை.எனினும் தமிழர்களுக்கு தென் திருவிதாங்கூர் சமஸ்தன மன்னர்கள்  ஆட்சியின் போது தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்க பெறவில்லை.ஆட்சி மொழி மலையாளம் மற்றும் ஆங்கிலமாகவே இருந்தது.சட்டமன்றங்களிலும்,

நீதிமன்றங்களிலும் வழக்குகள்,அலுவலக நடவடிக்கைகள் , மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலேயே நடந்து வந்தது.

வக்கீல்டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை.

நாகர்கோவில் மஜிஸ்ரேட்கோர்ட்டில் 10/09/1946 ம் நாளான்று ஒரு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் நாகர்கோவில் நீதிமன்ற நடவடிக்கைகள் ,வழக்குகள்,தீர்ப்புகள் அனைத்தும் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுவதாகவும் ,தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் நாஞ்சில்நாட்டில் மக்களின் நலன் கருதி நீதிமன்ற நடவடிக்கைகளை ,வழக்கு மற்றும் தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுவை சமர்பித்தார்.

அதன் எண் File No.D.Dis.3894/1946,Judicial dated 17/10/1946 ,Memorandum submitted  byT.M.Chidambarathanupillai.M.L.C,

Nagercoil dated 10/9/1946.K.A.T.V.M.என்பதாக Trivancore Gazetteer ல் பதிவாகி உள்ளது.அதன் பிறகு நாகர்கோவில் நீதிமன்ற நடவடக்கைகள், வழக்குகள்,தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

மருமக்கள் தாயம் என்ற சமுதாய வழக்கம்  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது.இந்த வழக்கம்  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு பல இன்னல்களையும்,குடும்ப அநீதிகளையும் விளைவித்து வந்தது.இந்த வழக்கத்தை  ஒழிக்க பல தமிழ் சமுதாயத்தலைவர்கள் பங்கெடுத்து கொண்டார்கள்.அதில் வக்கீல் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளையும் ஒருவர்.

29ம் தேதி ஏப்ரல் மாதம் 1921ம் ஆண்டு நடந்த நாஞ்சில் நாட்டு .வெள்ளாளர் சமுதாய சங்கம் ஏழாவது கூட்டம் குலசேகரன்புதூர்,என்ற உயரவிளை(ஒசரவிளை)ல் வைத்து திரு.வேலுப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.இதில் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளையும் கலந்து கொண்டு மருமக்கள் தாய வழக்கத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்கள்.திருவிதாங்கூர் ராஜாராஜா வர்மா குழு நடத்திய "மொழி கேட்டல்"என்ற நிகழ்விலும் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை கலந்து கொண்டு மருமக்கள் தாய வழக்கத்தின்  குறைகளை விளக்கி கூறினார்.அதன் விளைவாக மருமக்கள் தாயம் ஒரு முடிவுக்கு வந்தது.


டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை தன்னுடைய சட்ட மேலவை உறுப்பினர் பதவியின் போது தோவாளை தாலுகா  விவசாய பெருங்குடி மக்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் தேவஸ்தானம் கோவில்களில் பணிபுரிந்த   மணியக்காரர்களால் கடுமையான விவசாய வரி புகுத்தப்பட்டு விவசாயிகள் பெருந்துன்பத்திற்கு ஆளானார்கள்.இதை கண்டித்து வக்கீல் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை,ஒரு மாபெரும் கிரிஷிகர்மார் மாநாட்டை ஜனவரி 30ம்தேதி 1948ம் வருடம் 

தோவாளை  திடலில்  (தற்போதைய ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவில் முகப்பு)வைத்து நடைபெறுவதாக இருந்தது.ஆனால் அன்றைய தினம் மகாத்மா காந்தியடிகள் சுடப்பட்டு காலமானதால் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அடுத்தநாள் மாகாத்மாவின் இறுதி அஞ்சலி கூட்டமாக மாற்றப்பட்டது என்று முனைவர் அ.கா.பெருமாள் அவர்கள் பதிவு செய்கிறார்.


திரு.டி.எம்.சிதம்பர தாணுபிள்ளை, தோவாளையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் நாகர்கோவில் இராமவர்மபுரத்திலிருக்கும் ஜவகர் தெருவிலுள்ள தன்னுடைய சொந்த வீட்டில் வசித்துவந்தார்.நல்ல பெயரோடும் புகழோடும் வாழ்ந்த வக்கீல் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை 23/04/1951 ம் நாள்  நாகர்கோவிலில் அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானர்.


ஆதாரம்.


1)நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மீகம்.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.


2) முனைவர்.அ.கா.பெருமாள்.

நாட்டார் வழக்காற்றுவியல்.


3)Dr. R. Maheswari Assistant Professor Department of  History D.G.Govt.Arts College Mayiladuthurai


4)Proceedings of the Travancore Sri Chitra State Council. Third Council. Fourth session. Saturday ,the 20th July 1946 ..Original report. Vol.XXVIII No.1.

மந்தை மனப்பான்மை.

மந்தை மனப்பான்மை (Herd mentality)என்பது மனிதனோடு கூடிப்பிறந்த மனப்பான்மை, காரணம் மனிதன் ஒரு சமூகப்பிரஜை.தனித்து வாழ முடியாதவன்.முற்றும் துறந்த முனிவர் கூட தனக்கு என்று ஒரு கூட்டத்தை எதிர்பார்க்கின்றான்.அன்றாட வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒரு விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டால் உடனே ஒன்பதுபேர் அவனை தொடர ஆரம்பித்து விடுவார்கள்.சுயமாக சிந்தித்து செயல்படும் மனிதனுக்கு வெற்றி என்பது காலதாமதம் ஆகும் என்பதால். உடனடி வெற்றிக்கு (Instant Success) ஒரே வழி ,அடுத்தவர்கள் கண்ட குறுக்கு வழியை பார்த்து நடப்பதுதான்.ஒருவன் ஒன்று கொடுத்தால், தான் பத்து கொடுத்து வாங்குவேன் என்ற தன்முனைப்பு வேறு. மனிதனின் இந்த மனப்பான்மையை  பயன்படுத்தும் அரசியல், பொருளாதார அமைப்புகள் பெருகக்காரணம் மனிதனின் இந்த மந்தை மனப்பான்மை தான்.இன்றைய மேலாண்மைப்படிப்புகளில்.இது ஒரு பாடமாகவே சொல்லிக்கொடுக்கப்படுகிறது.இதன் விளைவு, சமநிலையில்லாத, சுயர்சார்பற்ற அமைப்புகள் பெருகிவிட்டன.சூழல் அறிந்து,தன்னிலை அறிந்து போலித்தனமான விளம்பரங்களுக்கு அடிமையாகாமல், பொறுமையுடன், தன்னுடைய நிலைமைக்கு தகுந்த வாழ்க்கையை, தார்மீக அடிப்படையில், அமைத்துக்கொண்டால் அமைதியான வாழ்வுக்கு வழி வகுக்கும்.

என்ன படித்தேன்

 இன்று என்ன படித்தேன்?

தினசரி காலையில் ஏதாவது புத்தகத்தைப் படிக்கும் எனக்கு, இன்று கிடைத்த வலைநூல் புத்தகம். Don't sweat the small stuff "என்ற ஆங்கில புத்தகம்.இந்த புத்தகத்தில் நாம் பெரும்பான்மையான நேரங்களில் சிறிய விஷயங்களை நாமே பெரிதுபடுத்தி நாமே எப்படி நம்மை கீழ்மைப்படுத்தி கொள்கிறோம் என்று பல நடைமுறை உண்மைகளை சொல்கிறார் ஆசிரியர்.உதாரணமாக நம்முடைய பதவியை தக்க வைத்துக்கொள்ள நம்முடைய தன்முனைப்பை பிறரிடம் பயன்படுத்தி அவர்களுடன் பிரிவினையை ஏற்படுத்தி கொள்கிறோம் ,அன்பான தருணங்களை மறந்து விடுகிறோம்.இப்படி தொடர்ச்சியாக நாம் நம்முடைய தன்முனைப்பை பதவிக்காக பயன்படுத்தும் போது, நாளடைவில் ஒரு தனிமனித தீவாக மாறிப்போகிறான் மனிதன்.சிறு சிறு விஷங்களில் விட்டுக்கொடுத்தால் கெட்டு போவோம் என்று நினைப்பது தவறு என்று நினைக்கிறோம்.இதனால் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் உறவுகளுக்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட்டு தீர்க்க முடியாத பிரச்சனையாக முடிகிறது.Don't Sweat the small stuff என்ற நூலின் ஆசிரியர் Richard Carlson. பல உண்மை நிகழ்வுகளை இந்த நூலில் எடுத்துக்காட்டி. சிறிய விஷயங்களுக்காக பிறரிடம் பகைத்துக்கொள்ளாதீர்கள் என்று நாசுக்காக சொல்கிறார்.பொருளுக்காக இல்லாமல் பிறரிடம்  அன்பை விதைக்கவாவது சிறிது விட்டுக்கொடுப்போமே.

Blogger எழுதி சில காலம் ஆகிவிட்டது.மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

தா.சிதம்பரம் பாபுஜி.

வெள்ளி, 7 ஜூலை, 2023

லஞ்சம் ஒரு உப்புக்கு சப்பு

வணக்கம்.

வெகுநாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்.லஞ்சம் நம் வாழ்க்கையில் ஒரு நடைமுறையாக மாறிவிட்டது. ஒரு வேலைக்கு பணம்கொடுப்பது கூலி,சம்பளம் என்பது ஆங்கீகரிக்கப்பட்ட சொற்களாக இருந்தாலும், லஞ்சம் என்ற சொல் ஒரு சமூக அங்கீகாரம் பெறாத சொல்லாக இருக்கிறது.அரசியல் தளங்களிலும் அடிக்கடி பயன் படுத்தும் சொல்லாக இருக்கிறது.ஆனால் லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் வாங்குவதும் குற்றம் என்ற வாசகங்கள் அரசு அலுவலங்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் சாத்தியப்படுகிறதா  என்ற கேள்வி எழுகிறது.

தண்ணீர் இலைத்தாமரைப்போல ஒரு செயலை செய்து முடிக்க ஒரு படி மேலாகவே பணம் கொடுப்பது பழக்கமாகிவிட்டது. சம்பளம் போக படி, சம்பளம் போக கிம்பளம் ,தரகு எவ்வளவு?போன்ற வழக்கு பழக்காமாகிவிட்டது.ஆகையினால் லஞ்சம் என்ற வார்த்தை வழக்கிழந்து பழக்காமாகிவிட்டது என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரியும்.ஆனாலும் நாம் உப்புக்கு சப்பு என்பது போல் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.நேர்மையான வாழ்வு நிம்மதியை கொடுக்கும் நேர்மையற்ற வாழ்வு மன நிம்மதியை இழக்கச்செய்யும்.சேற்றில் முளைத்த செந்தாமரை போல் இன்றும் நல்ல மக்கள் வாழ்கிறார்கள்.தாமரை இலை தண்ணீர்போல நாம் நல்மக்களுடன் பழகி உழைப்பை பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் அணுகி வாழ்வதே சிறந்த வாழ்வு என்பதில் ஐயம் சிறிதும் வேண்டாம்.

சனி, 30 ஜனவரி, 2021

Simplicity is spirituality

 To lead a simple life is the way to attain liberation from all levels of existence.

சனி, 17 நவம்பர், 2018

Learning never ends ...............

Learning never ends ................

A bumble bee never knows that its wings are lighter than its heavy body,but it flies spontaneously.It does not have any limitation on its wings . Science does not have any clue on the  aerodynamics of the bumble bee.

Human beings set their own limitations and do not set their tasks.
So there progress is also limited.