இன்று என்ன படித்தேன்?
தினசரி காலையில் ஏதாவது புத்தகத்தைப் படிக்கும் எனக்கு, இன்று கிடைத்த வலைநூல் புத்தகம். Don't sweat the small stuff "என்ற ஆங்கில புத்தகம்.இந்த புத்தகத்தில் நாம் பெரும்பான்மையான நேரங்களில் சிறிய விஷயங்களை நாமே பெரிதுபடுத்தி நாமே எப்படி நம்மை கீழ்மைப்படுத்தி கொள்கிறோம் என்று பல நடைமுறை உண்மைகளை சொல்கிறார் ஆசிரியர்.உதாரணமாக நம்முடைய பதவியை தக்க வைத்துக்கொள்ள நம்முடைய தன்முனைப்பை பிறரிடம் பயன்படுத்தி அவர்களுடன் பிரிவினையை ஏற்படுத்தி கொள்கிறோம் ,அன்பான தருணங்களை மறந்து விடுகிறோம்.இப்படி தொடர்ச்சியாக நாம் நம்முடைய தன்முனைப்பை பதவிக்காக பயன்படுத்தும் போது, நாளடைவில் ஒரு தனிமனித தீவாக மாறிப்போகிறான் மனிதன்.சிறு சிறு விஷங்களில் விட்டுக்கொடுத்தால் கெட்டு போவோம் என்று நினைப்பது தவறு என்று நினைக்கிறோம்.இதனால் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் உறவுகளுக்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட்டு தீர்க்க முடியாத பிரச்சனையாக முடிகிறது.Don't Sweat the small stuff என்ற நூலின் ஆசிரியர் Richard Carlson. பல உண்மை நிகழ்வுகளை இந்த நூலில் எடுத்துக்காட்டி. சிறிய விஷயங்களுக்காக பிறரிடம் பகைத்துக்கொள்ளாதீர்கள் என்று நாசுக்காக சொல்கிறார்.பொருளுக்காக இல்லாமல் பிறரிடம் அன்பை விதைக்கவாவது சிறிது விட்டுக்கொடுப்போமே.
Blogger எழுதி சில காலம் ஆகிவிட்டது.மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
தா.சிதம்பரம் பாபுஜி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக