புதன், 13 மார்ச், 2024
மந்தை மனப்பான்மை.
மந்தை மனப்பான்மை (Herd mentality)என்பது மனிதனோடு கூடிப்பிறந்த மனப்பான்மை, காரணம் மனிதன் ஒரு சமூகப்பிரஜை.தனித்து வாழ முடியாதவன்.முற்றும் துறந்த முனிவர் கூட தனக்கு என்று ஒரு கூட்டத்தை எதிர்பார்க்கின்றான்.அன்றாட வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒரு விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டால் உடனே ஒன்பதுபேர் அவனை தொடர ஆரம்பித்து விடுவார்கள்.சுயமாக சிந்தித்து செயல்படும் மனிதனுக்கு வெற்றி என்பது காலதாமதம் ஆகும் என்பதால். உடனடி வெற்றிக்கு (Instant Success) ஒரே வழி ,அடுத்தவர்கள் கண்ட குறுக்கு வழியை பார்த்து நடப்பதுதான்.ஒருவன் ஒன்று கொடுத்தால், தான் பத்து கொடுத்து வாங்குவேன் என்ற தன்முனைப்பு வேறு. மனிதனின் இந்த மனப்பான்மையை பயன்படுத்தும் அரசியல், பொருளாதார அமைப்புகள் பெருகக்காரணம் மனிதனின் இந்த மந்தை மனப்பான்மை தான்.இன்றைய மேலாண்மைப்படிப்புகளில்.இது ஒரு பாடமாகவே சொல்லிக்கொடுக்கப்படுகிறது.இதன் விளைவு, சமநிலையில்லாத, சுயர்சார்பற்ற அமைப்புகள் பெருகிவிட்டன.சூழல் அறிந்து,தன்னிலை அறிந்து போலித்தனமான விளம்பரங்களுக்கு அடிமையாகாமல், பொறுமையுடன், தன்னுடைய நிலைமைக்கு தகுந்த வாழ்க்கையை, தார்மீக அடிப்படையில், அமைத்துக்கொண்டால் அமைதியான வாழ்வுக்கு வழி வகுக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக