புதன், 13 மார்ச், 2024
மந்தை மனப்பான்மை.
என்ன படித்தேன்
இன்று என்ன படித்தேன்?
தினசரி காலையில் ஏதாவது புத்தகத்தைப் படிக்கும் எனக்கு, இன்று கிடைத்த வலைநூல் புத்தகம். Don't sweat the small stuff "என்ற ஆங்கில புத்தகம்.இந்த புத்தகத்தில் நாம் பெரும்பான்மையான நேரங்களில் சிறிய விஷயங்களை நாமே பெரிதுபடுத்தி நாமே எப்படி நம்மை கீழ்மைப்படுத்தி கொள்கிறோம் என்று பல நடைமுறை உண்மைகளை சொல்கிறார் ஆசிரியர்.உதாரணமாக நம்முடைய பதவியை தக்க வைத்துக்கொள்ள நம்முடைய தன்முனைப்பை பிறரிடம் பயன்படுத்தி அவர்களுடன் பிரிவினையை ஏற்படுத்தி கொள்கிறோம் ,அன்பான தருணங்களை மறந்து விடுகிறோம்.இப்படி தொடர்ச்சியாக நாம் நம்முடைய தன்முனைப்பை பதவிக்காக பயன்படுத்தும் போது, நாளடைவில் ஒரு தனிமனித தீவாக மாறிப்போகிறான் மனிதன்.சிறு சிறு விஷங்களில் விட்டுக்கொடுத்தால் கெட்டு போவோம் என்று நினைப்பது தவறு என்று நினைக்கிறோம்.இதனால் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் உறவுகளுக்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட்டு தீர்க்க முடியாத பிரச்சனையாக முடிகிறது.Don't Sweat the small stuff என்ற நூலின் ஆசிரியர் Richard Carlson. பல உண்மை நிகழ்வுகளை இந்த நூலில் எடுத்துக்காட்டி. சிறிய விஷயங்களுக்காக பிறரிடம் பகைத்துக்கொள்ளாதீர்கள் என்று நாசுக்காக சொல்கிறார்.பொருளுக்காக இல்லாமல் பிறரிடம் அன்பை விதைக்கவாவது சிறிது விட்டுக்கொடுப்போமே.
Blogger எழுதி சில காலம் ஆகிவிட்டது.மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
தா.சிதம்பரம் பாபுஜி.
வெள்ளி, 7 ஜூலை, 2023
லஞ்சம் ஒரு உப்புக்கு சப்பு
வணக்கம்.
வெகுநாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்.லஞ்சம் நம் வாழ்க்கையில் ஒரு நடைமுறையாக மாறிவிட்டது. ஒரு வேலைக்கு பணம்கொடுப்பது கூலி,சம்பளம் என்பது ஆங்கீகரிக்கப்பட்ட சொற்களாக இருந்தாலும், லஞ்சம் என்ற சொல் ஒரு சமூக அங்கீகாரம் பெறாத சொல்லாக இருக்கிறது.அரசியல் தளங்களிலும் அடிக்கடி பயன் படுத்தும் சொல்லாக இருக்கிறது.ஆனால் லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் வாங்குவதும் குற்றம் என்ற வாசகங்கள் அரசு அலுவலங்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் சாத்தியப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
தண்ணீர் இலைத்தாமரைப்போல ஒரு செயலை செய்து முடிக்க ஒரு படி மேலாகவே பணம் கொடுப்பது பழக்கமாகிவிட்டது. சம்பளம் போக படி, சம்பளம் போக கிம்பளம் ,தரகு எவ்வளவு?போன்ற வழக்கு பழக்காமாகிவிட்டது.ஆகையினால் லஞ்சம் என்ற வார்த்தை வழக்கிழந்து பழக்காமாகிவிட்டது என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரியும்.ஆனாலும் நாம் உப்புக்கு சப்பு என்பது போல் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.நேர்மையான வாழ்வு நிம்மதியை கொடுக்கும் நேர்மையற்ற வாழ்வு மன நிம்மதியை இழக்கச்செய்யும்.சேற்றில் முளைத்த செந்தாமரை போல் இன்றும் நல்ல மக்கள் வாழ்கிறார்கள்.தாமரை இலை தண்ணீர்போல நாம் நல்மக்களுடன் பழகி உழைப்பை பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் அணுகி வாழ்வதே சிறந்த வாழ்வு என்பதில் ஐயம் சிறிதும் வேண்டாம்.
சனி, 30 ஜனவரி, 2021
Simplicity is spirituality
To lead a simple life is the way to attain liberation from all levels of existence.
சனி, 17 நவம்பர், 2018
Learning never ends ...............
A bumble bee never knows that its wings are lighter than its heavy body,but it flies spontaneously.It does not have any limitation on its wings . Science does not have any clue on the aerodynamics of the bumble bee.
Human beings set their own limitations and do not set their tasks.
So there progress is also limited.
வியாழன், 30 டிசம்பர், 2010
Experience or Expression
We experience so many incidents in life but all can not be expressed in words and writings.
Those who write and speak others experience can not bring the feelings of others and they can neither bring out the truth .Take care of your words and writings.
